2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ ஆதரவு !!

சென்னை:
நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ஒட்டப்பாலம் ‘இம்மானுவேல் சேகரனார் மிஷனின்’ கவுரவத் தலைவரும் – தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முதல் பேரனுமான ரமேஷ் தேவேந்திரர், இன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்தார்.

அப்போது அவர், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தார்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழ.நெடு​மாறன் ஆதரவு… இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழர் தேசிய முன்னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர், “தமிழ் மற்​றும் தமிழ்​நாட்​டின் நலனுக்கு எதி​ராக செயல்​படு​வது, இந்தி மற்​றும் சமஸ்​கிருத மொழியை தமிழகத்​தில் திணிப்​பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்​பது போன்ற நடவடிக்​கை​களில் ஈடு​படும் பாஜக, தமிழகத்​தில் பல கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​துள்​ளது.

இந்த பேர​பா​யத்தை முறியடிக்க வேண்​டியது தமிழர்​களின் முதன்​மை​யான கடமை​யாகும்.

எனவே, பாஜக கூட்​ட​ணியை முறியடிக்​கும் வகை​யில், வரும் தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு ஆதரவு அளிப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.” எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *