பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது – பெரம்பூரில் திலகபாமா போட்டி; தருமபுரியில் சவுமியா அன்புமணி!!

சென்னை: 

பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம் காணும் பெரம்பூரில் திலகபாமா போட்டியிடுகிறார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026-ம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. பெரம்பூர் -ம. திலகபாமா

2. தருமபுரி – சவுமியா அன்புமணி,

3. விருத்தாசலம் – மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,

4. சேலம் மேற்கு – மு. கார்த்தி,

5. பென்னாகரம் – பாடி வெ. செல்வம்,

6. போளூர் – சி.ஆர். பாஸ்கரன்,

7. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு,

8. ஜெயங்கொண்டம் – க. வைத்தி,

9. சேலம் வடக்கு – எஸ். சதாசிவம்,

10. விக்கிரவாண்டி – சி. சிவக்குமார்,

11. சோளிங்கர் – க. சரவணன்,

12. மயிலாடுதுறை சித்தமல்லி ஏ. பழனிச்சாமி,

13. உத்திரமேரூர் – பெ. மகேஷ்குமார்,

14. ரிஷிவந்தியம் – அ.ப. செழியன்,

15. காட்டுமன்னார் கோயில் (தனி) – மருத்துவர் அன்பு. சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 3 பாமக வேட்பாளர்கள்

1. கீழ்வேளூர் – ச. வடிவேல் இராவணன்

2. அம்பத்தூர் – கே.என். சேகர்

3. செஞ்சி – அ. கணேஷ் குமார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *