நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக – அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் களமிறங்குகின்றன.
தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் களமிறங்குகின்றனர்.
அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் ஏ.எல். விஜயன் களமிறங்குகிறார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் ராஜசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்.
தேனியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுக சார்பில் நாராயணசாமியும் களம் காண்கின்றனர்.
ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தனும் அதிமுக சார்பில் கஜேந்திரனும் களம் காண்கின்றனர்.
ஈரோடு தொகுதியில் திமுகவில் பிரகாஷும் , அதிமுகவில் ஆற்றல் அசோக்குமாரும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
சேலத்தில் திமுக சார்பில் செல்வ கணபதியும் அதிமுகவில் விக்னேஷும் போட்டியிடுகிறார்கள்.