பொன்​னேரி அருகே திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயில்​ திருத்​தேர்​ திரு​விழா​வில்​ தேர்​ கவிழ்ந்​தது – அர்ச்​சகர் காயமடைந்த சம்​பவம், பக்​தர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது!!

பொன்னேரி:
திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயில் திருத்​தேர் திரு​விழா​வில் தேர் கவிழ்ந்​து, அர்ச்​சகர் காயமடைந்த சம்​பவம், பக்​தர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே திருப்​பாலை​வனம் கிராமத்​தில் அமைந்​துள்​ளது பழமை​யான லோகாம்​பி​காதேவி சமேத திருப்பாலீஸ்​வரர் கோயில். முதலாம் ராஜேந்​திரசோழன் காலத்​தில் அமைக்​கப்​பட்ட இக்​கோ​யில், இந்​துசமய அறநிலை​யத் துறை​யின் கீழ் உள்​ளது.

இக்​கோயி​லில் ஆண்டுதோறும் பங்​குனி உத்​திர பிரம்​மோற்​சவம் வெகு​விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயி​லில் கடந்த 23-ம் தேதி பங்​குனி உத்​திர பிரம்​மோற்சவ விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இவ்​விழா​வில், நாள்​தோறும் திருப்​பாலீஸ்​வரர் வீதி​யுலா சென்று பக்​தர்​களுக்கு அருள் பாலித்து வந்​தார்.

இந்​நிலை​யில், பங்​குனி உத்​திர பிரம்​மோற்சவ விழா​வின் முக்​கிய திரு​விழா​வான திருத்​தேர் திரு​விழா நேற்று காலை தொடங்​கியது.

இதில், வண்ண மலர்​கள், வாழை மற்​றும் துணி தோரணங்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட சுமார் 22 அடி உயரம் மற்​றும் 5 டன் எடைக் கொண்ட மரத்​திலான திருத்​தேரில் லோகாம்​பி​காதேவி சமேத, திருப்​பாலீஸ்​வரர் எழுந்​தருளி முக்​கிய மாட வீதி​கள் வழி​யாக வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து கொண்​டிருந்​தார்.

பொன்​னேரி, திருப்​பாலை​வனம், பழவேற்​காடு உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த திரளான பக்​தர்​கள் தேரை வடம் பிடித்து இழுத்​து, சுவாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த நிலை​யில், நேற்று பிற்​பகல் தேரோட்​டம் சிறிது நேரம் நிறுத்​தப்​பட்​டு, மீண்​டும் தொடங்​கியது.

அப்​போது, திருத்​தேர், திருப்​பாலை​வனம் காவல் நிலை​யத்தை கடந்து பழவேற்​காடு சாலைக்கு வரும் போது எதிர்​பா​ராத​வித​மாக சாலை​யில் கவிழ்ந்​தது.

இதில், தேரில் இருந்த, கோயில் அர்ச்​சக​ரான அரவிந்த் என்​கிற நாக​ராஜ் கையில் காயமடைந்​து, பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

மேலும், திரு​விழா பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட திருப்​பாலை​வனம் போலீ​ஸார்,தீயணைப்பு வீரர்​கள், விபத்​தில் சிக்​கிய தேரை மீட்​கும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *