உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை படைத்த ‘யூத்’

சென்னை:
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம்.

கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

ஆனால், ‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு ஊர்களுக்கு படக்குழுவினருடன் பயணப்பட்டு வந்தார் கென் கருணாஸ்.

இப்படத்தினை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உல்ளிட்ட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *