சூரி நடித்து வந்த ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு!!

சென்னை:
சூரி நடித்து வந்த ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வந்த படம் ‘மண்டாடி’. கடலுக்குள் நடக்கு படகுப் போட்டியை மையமாக கொண்ட கதை என்பதால், இதற்கு பெரும் முதலீடு செய்து தயாரித்து வருகிறது ஆர்.எஸ்.இன்போடையின்மண்ட் நிறுவனம்.

தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் வீடியோ பதிவின் மூலம் அறிவித்துள்ளனர்.

கடலுக்குள் படப்பிடிப்பு, நடிகர்களுக்கு காயம் என பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

சூரியின் நடிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சத்யராஜ், சுஹாஸ், மகிமா நம்பியார், ரவீந்திரா விஜய் உள்ளிட்ட பலர் சூரியுடன் நடித்துள்ளனர்.

இதற்கு ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *