நடிகர் தனுஷ் தனது வாழ்க்கையை அழித்ததாக பாடகி சுசித்ரா கடுமையான குற்றச்சாட்டு!!

முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் நடிகர் தனுஷின் சேர்ந்து தனது வாழ்க்கையை அழித்ததாக பாடகி சுசித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்

பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசிலீக்ஸ் என்ற பெயரில் வந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட புகைப்படங்களுக்கு பின்னால் எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும், நடிகர் தனுஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் , யாரடி நீ மோகினி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டனர். உலகையே மாற்றுவோம் என்று அவர்கள் கூறி வந்தனர்.

இந்த குழுவில் நடிகை ஆண்ட்ரியாவும் இருந்தார். ஒருநாள் அதிகாலை கார்த்திக் குமார் எனக்கு போன் செய்து தனது ட்விட்டர் மற்றும் பாஸ்வேர்டை கேட்டு தெரிந்து கொண்டார்.

இவர்கள் பிராங்க் செய்து விளையாடி என்னை பலிகிடா ஆக்கினார். சுசிலீக்ஸ் குறித்து ஏன் சம்பந்தப்பட்ட நடிகைகள் யாரும் புகார் கொடுக்கவில்லை. புகைப்படங்கள் தெரிந்து கொடுக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் சேர்ந்து இதை செய்தார்கள்.

திருமணமான இரண்டே ஆண்டுகளில் கார்த்திக் குமார் ஒரு ஓரின செயற்கையாளர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். கடந்த 14 வருடங்களாக நான் அவரிடம் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவர் கொடுக்கவில்லை தனுஷ் அவரும் அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? கார்த்திக் குமார் தனது ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மும்பையில் ரூம் எடுத்து தங்குவார் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *