சென்னை:
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி’படத்தில் கதாநாயகியாக கயாடுலோகர் மற்றும் விஜயராகவன், பாபுராஜ், அலெக்சாண்டர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ்பிஜாய் இசை அமைத்துள்ளார்.
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சிகியூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கயாடுலோகர் பேசியதாவது:-
இது என்னுடைய 3-வது மலையாள படம். படத்தில் என்னுடைய கேரக்டர் வித்தியாசமானது. என் இதயத்துக்கு நெருக்கமானதும் கூட. டொவினோ தாமஸ் சிறந்த திறமையான நடிகர்.
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அடுத்ததாக வரும் போது நன்றாக தமிழில் பேசுவேன் என்றார்.