இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாரா விற்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்த ராதிகா சரத்குமார்!!

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *