எனது மூத்த சகோதரரின் மகன் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் வரவேற்கிறேன் – நடிகர் கார்த்திக்!!

எனது மூத்த சகோதரரின் மகன் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக், எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தந்தை வழியில் அரசியலுக்கு வருகிறார். வரவேற்போம்.

நண்பரான சரத்குமார் மனைவி ராதிகாவும் போட்டியிடுகிறார். மக்கள் முடிவு செய்யட்டும். நடிகர் விஜய் சரியான வயதில் அரசியலுக்கு வருகிறார்.

எம்.ஜி.ஆருக்குபின் அரசியலுக்குவந்த நடிகர்கள் பெரிய வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்கள் எதுவும் தெரியாது என நினைக்கின்றனர். அது எனக்கு வருத்தம். அண்ணாமலை விலை கொடுத்து எதையும் வாங்க முடியாது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *