விஜய் காரின் மீதே ஏறி தவெகவினர் அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம்!!

விழுப்புரம்,
தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் தவெக தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக புறப்பட்டார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஜய் கார் சென்றுகொண்டிருந்தது.

விஜய்யின் காரை பின்தொடரக்கூடாது என தவெக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் விஜய் காரின் மீதே ஏறி தவெகவினர் அலப்பறையில் ஈடுபட்டனர். மேலும், காரில் ஏறிய ஒருவர் கண்ணாடியில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த விஜய்யின் பவுன்சர் காரின் மீது ஏறிய தொண்டர்களை அப்புறப்படுத்த முயற்சித்தார்.

இளைஞர்கள் விஜய் கார் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *