நான் பிரதீப் ரங்கநாதன் சகோதரருக்கு நன்றி கூற வேண்டும் – மேடையில் உருக்கமாக பேசிய விக்னேஷ் சிவன்…

சென்னை:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘LIK’ (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே. சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்தத நிலையில் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் பிரதீப் ரங்கநாதன் சகோதரருக்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில், இந்தப் படம் தொடங்கியதே எனக்கு மிகவும் தனிப்பட்டதும், ஒரு பெரிய கதையும் கொண்ட ஒரு நிகழ்வாகும்.


அவருக்கு நான் செலுத்தும் நன்றியுணர்வு வாழ்நாள் முழுமைக்கும் உரியது. இதற்கு நான் கைமாறு செய்யக்கூடிய ஒரே வழி, சில சாதனைகளை படைக்கும் வகையிலும், அவற்றை முறியடிக்கவே நீண்ட காலம் பிடிக்கும் வகையிலும் அமைந்த ஒரு சிறந்த திரைப்படத்தை வழங்குவது மட்டுமே.

நான் எனது முழு திறனையும் வெளிப்படுத்தி உழைத்துள்ளேன்; இந்தப் படம் உருவாகி வந்திருக்கும் விதம் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *