தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி, ரோடு ஷோ!!

நாகர்கோவில் !!
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்துகிறார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி குமரி மாவட்டம் வருகை தந்து, வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இதற்காக, நாகர்கோவில் அருகே ஈத்தங்காட்டில் உள்ள மைதானம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 15-ம் தேதி நாகர்கோவிலில் ‘ரோடு ஷோ’ நடத்த இருக்கிறார்.

இதை நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி செய்தார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து, வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, ரோடு ஷோ நடைபெறும் வடசேரி – வேப்பமூடு வரையிலான சாலையை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *