மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்!!

மேஷம்
வருமானம் உயரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

ரிஷபம்
மங்கல செய்திகள் மனை தேடி வரும் நாள். தங்குதடையின்றி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மிதுனம்
ஆதாயத்தை காட்டிலும் செலவு கூடும் நாள். இடமாற்றம். வீடு மாற்றம் உறுதியாகலாம். உறவினர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர். தொழில் பங்கு தாரர்களால் பிரச்சனை ஏற்படும்.

கடகம்
சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற முயற்சி செய்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்
இனிமையான நாள். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு.

கன்னி
யோகமான நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

துலாம்
பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்து சேரும். உறவினர்களின் உதவி கிட்டும்.

விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பார்த்தபடியே வருமானம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படலாம்.

மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களைத் திடீரென மாற்றுவீர்கள்.

கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

மீனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொலைபேசி வழித்தகவலால் தொழில் முன்னேற்றம் உண்டு. அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *