மருத்​து​வத் துறை​யில் புதி​தாக தடம் பதிக்​கும் இளம் மருத்​து​வர்​கள் அனை​வரும் 3 முக்​கிய அம்​சங்​களை கடைபிடிக்க வேண்​டும் – தேசிய மருத்துவ ஆணைய தலைவர் அறிவுறுத்தல்!!

சென்னை:
போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் 41-வது பட்​டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த விழா​வில் இளநிலை, முது​நிலை மருத்​து​வம், மருத்​துவ ஆராய்ச்சி முனை​வர் படிப்​பு​கள், துணை மருத்​து​வப் படிப்​பு​களை நிறைவு செய்த 902 மாணவர்​களுக்கு பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டன. சிறப்​பிடம் பெற்ற 53 பேருக்கு தங்​கப் பதக்​கங்​கள் கொடுக்​கப்​பட்​டன.

ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி நிறுவனஇணைவேந்​தர் ஆர்​.​வி.செங்​குட்​டு​வன், துணை இணைவேந்​தர் மருத்​து​வர் மகேஷ் வக்​க​முடி, துணைவேந்​தர் மருத்​து​வர் உமா சேகர், பதி​வாளர் மருத்​து​வர் எஸ்​.செந்​தில்​கு​மார், மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் மருத்​து​வர் பாலாஜி சிங், நிதித்​துறை இயக்​குநர் ஜெ.ர​விசங்​கர் உள்​ளிட்​டோர் விழா​வில் கலந்து கொண்​டனர்.

விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) தலை​வர் மருத்​து​வர் அபிஜத் சந்​திர​காந்த் ஷேத் பேசியதாவது:

மருத்​து​வத் துறை​யில் புதி​தாகதடம் பதிக்​கும் இளம் மருத்​து​வர்​கள் அனை​வரும் 3 முக்​கிய அம்​சங்​களை கடைபிடிக்க வேண்​டும். முதலா​வது, கனி​வான மருத்​துவ சேவை.

நோயாளி​கள் உடல்​நலக் குறைவுக்கு தீர்வு காண வேண்​டும் என்​ப​தற்​காக மட்​டுமே மருத்​து​வர்​களை நாடு​வ​தில்​லை.

அவர்​களுக்கு உள்ள அச்​ச​மும், பதற்​ற​மும், தெளி​வின்​மை​யும் மருத்​து​வரை அணுகி​னால் சரி​யாகும் என நம்​பு​கிறார்​கள்.

அதனை கருத்​தில் கொண்டு அவர்​களிடம் கனி​வான வார்த்​தைகளில் பேச வேண்​டும். அவர்களின் பிரச்​சினை​களை கவனத்​துடன் கேட்​டறிய வேண்​டும்.

நம்​பிக்​கை​யுடன் அவர்​களை வழி நடத்த வேண்​டும். அதி நவீன மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கும் பலன்​களைக் காட்​டிலும் இது​தான் வலிமை​யானது.

இரண்​டாவ​தாக, மருத்துவர்கள் அனை​வரும் வாழ்​நாள் முழு​வதும் மாணவர்​களாக இருக்க வேண்​டும்.

புதிய தொழில்​நுட்​பங்​கள், மருத்​துவ ஆய்​வு​கள், நோய்​களுக்​கான தீர்​வு​கள் என அனைத்து விஷ​யங்​களை​யும் தொடர்ந்து கற்​றுக் கொண்டே இருக்க வேண்​டும்.

மூன்​றாவது நெறி சார்ந்து செயல்​படு​தல். நோயாளி​கள் தங்​கள் வாழ்​வையே மருத்​து​வர்​களிடம் நம்பி ஒப்​படைக்​கிறார்​கள்.

அதற்கு பிர​திபல​னாக மருத்​துவ சேவை​யாற்​றும்​போது, நெறி சார்ந்து இயங்​குதல் மிக​வும்அவசி​யம் ஆகும்.

மருத்​து​வர்​கள் நெறிகளை மறவாமல் சமூகத்​துக்​குப் பங்​களிக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *