சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை. சோழிங்கநல்லூர் – வேளச்சேரி – சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்!! நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்…..

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 23) அன்று நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேற்று சென்னையில் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்த நிலையில், இன்றும் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று காலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.

இதனை தொடர்ந்து சென்னையில் தான் பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை. சோழிங்கநல்லூர் – வேளச்சேரி – சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்’ எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், ‘டெல்லியின் சர்வாதிகாரம் தமிழ்நாடுக்குள் ஊடுருவாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நாங்கள் எங்களைப் பாதுகாத்து வருகிறோம்.

ஜனநாயகத்தைக் காப்பதற்கு, பாசிசத்தைத் தோற்கடிப்பதே ஒரே தீர்வாகும். ஜனநாயகம் மற்றும் அந்த ஜனநாயகத்துக்குள் அடங்கியுள்ள வாக்களிக்கும் உரிமை ஆகியவை அளவற்ற வலிமை வாய்ந்தவை.

ஜனநாயகத்தின் மகத்தான வலிமையின் மீதும், வாக்குச்சீட்டின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தமிழ்நாடே இறுதியில் வெல்லும்.

சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க முயல்பவர்களை இந்திய நாடு நிச்சயம் தோற்கடிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *