விசில் அடிப்​பவர்​களைத் திரையரங்​கு​களுக்கு அனுப்​புங்​கள்; சினிமா மோகத்​தில் மயங்​கு பவர்​கள் சிறுத்​தைகள் அல்ல – திருமாவளவன் பேச்சு!!

சென்னை:
“​விசில் அடிப்​பவர்​களைத் திரையரங்​கு​களுக்கு அனுப்​புங்​கள். சினிமா மோகத்​தில் மயங்​குபவர்​கள் சிறுத்​தைகள் அல்ல” என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் இறுதி நாளான நேற்று விசிக தலை​வர் திரு​மாவளவன் காட்​டுமன்​னார்​கோ​வில் தொகுதி கும​ராட்சி பகு​தி​யில் விசிக வேட்​பாளர் ஜோதி​மணிக்கு ஆதர​வாக வாக்​குச் சேகரித்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது:

இன்​றுள்ள அதி​முக ஜெயலலி​தா​வின் அதி​முக அல்ல. அது மோடி​யின் அதி​முக. அதே​போல் அன்​புமணி தலை​மையி​லான பாமக-​வும் மோடி​யின் பாமக தான். நீங்​கள் பாமக-வுக்கு அளிக்​கும் ஒவ்​வொரு வாக்​கும் நேரடி​யாக பாஜக-வுக்கே செல்​லும்.

சாதி உணர்​வைத் தூண்டி உங்​களிடம் ஓட்டு வாங்​குபவர்​களிடம் ஏமாறாதீர்​கள். விசில் அடிப்​பவர்​களைத் திரையரங்​கு​களுக்கு அனுப்​புங்​கள். சினிமா மோகத்​தில் மயங்​குபவர்​கள் சிறுத்​தைகள் அல்ல.

விஜய்க்​குப் போடும் ஓட்டு பாஜக-வுக்​குப் போடு​வ​தாகவே அர்த்​தம். திமுக-வை பலவீனப்​படுத்​தவே அவர் களமிறக்​கப்​பட்​டுள்​ளார்.

இதன் பின்​னணி​யில் மோடி மற்​றும் அமித் ஷா ஆகி​யோரின் மூளை செயல்​படு​கிறது.

காட்​டுமன்​னார்​கோ​வில் சிறுத்​தை​களின் தாய்​மடி என்​பதை நிரூபிக்​கும் வகை​யில், ஜோதி​மணியை பெரு​வாரி​யான வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெறச் செய்​யுங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *