சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் பலப்பரீட்சை!!

ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 40 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யிருந்​தது. நடப்பு சீசனில் ஹைத​ரா​பாத்​துடன் 2-வது முறை​யாக மோதுகிறது ராஜஸ்​தான் அணி.

இரு அணி​களும் கடந்த 13-ம் தேதி ஹைத​ரா​பாத்​தில் மோதி இருந்​தன. அந்த ஆட்​டத்​தில் 57 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் அணி தோல்வி அடைந்​திருந்​தது. 217 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ் தான் அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இருந்​தது.

பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோரது வேகப்​பந்து வீச்​சால் 9 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை தாரை​வார்த்த ராஜஸ்​தான் அணி​யால் அதன் பின்​னர் மீள முடி​யாமல் போனது.

இந்த ஆட்​டத்​தில் பந்​து​வீச்​சிலும் ராஜஸ்​தான் அணி தொடக்க ஓவர்​கள், நடுகள ஓவர்​கள், இறு​திக்​கட்ட ஓவர்​கள் என எதி​லுமே சிறப்​பாகச் செயல்​பட​வில்​லை.

அனைத்​துத் துறை​களி​லுமே அவர்​கள் தடு​மாறினர். எனவே, கடந்த முறை எங்கு சொதப்​பி​னார்​களோ, அந்த இடங்​களில் தங்​களின் தகுந்த பதிலடியைக் கொடுக்க தற்​போதைய போட்​டியை ராஜஸ்​தான் அணி சரி​யான வாய்ப்​பாக அவர்​கள் கருது​வார்​கள்.

ஒட்​டுமொத்​தத்​தில் முந்​தைய தோல்விக்கு இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வளர்ந்து வரும் இளம் நட்​சத்​திரம் வைபவ் சூர்​ய​வன்​ஷி, துருவ் ஜுரெல் ஆகியோர் பேட்​டிங்​கில் தங்​களது அதிரடி​யால் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

15 வயது ஆன சூர்​ய​வன்​ஷி, 220.86 என்ற பிரமிக்​கத்​தக்க ஸ்டிரைக் ரேட்​டுடன் 254 ரன்​கள் விளாசி உள்​ளார்.

இரண்டு முறை வெறும் 15 பந்​துகளில் அரைசதம் அடித்து மிரட்​டி​யிருந்​தார். ஜெய்​ஸ்​வால் தொடக்​கத்​தில் நிதானத்​தை​யும் அதே சமயம் அதிரடியை​யும் வெளிப்​படுத்​தி, 49.00 என்ற சராசரி​யுடன் 245 ரன்​களைச் சேர்த்​துள்​ளார்.

பந்​து​வீச்​சில் ஜோஃப்ரா ஆர்ச்​சர், ஏழு போட்​டிகளில் 11 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளார்.

அனுபவம் வாய்ந்த ஆல்​-ர​வுண்​டர் ரவீந்​திர ஜடேஜா, லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் ஆட்​ட​மிழக்​காமல் 43 ரன்​கள் எடுத்​ததோடு, முக்​கிய​மான விக்​கெட்​டை​யும் வீழ்த்தி அணி​யின் வெற்​றிக்கு முக்​கியப் பங்​காற்​றி​னார்.

இவர்​களிடம் இருந்து மேலும் சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும்.

இந்த சீசனில் சீரற்ற ஆட்​டத்​தால் ஏற்​றத்​தாழ்​வு​களைச் சந்​தித்த போதி​லும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி புள்​ளி​கள் பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது.

7 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​களை பெற்​றுள்​ளது.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி பெரும்​பாலும் தங்​களின் அதிரடி​யான டாப்​-ஆர்​டர் பேட்​டர்​களையே நம்​பி​யுள்​ளது.

டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ராக மின்​னல் வேகத்​தில் சதம் விளாசிய உத்​வேகத்​துடன் இருக்​கும் அபிஷேக் சர்​மா, அதே அதிரடியைத் தொடர ஆர்​வ​மாக இருப்​பார்.

அந்த ஆட்​டத்​தில் அவர், 68 பந்​துகளில் 135 ரன்​கள் விளாசி​யிருந்​தார். டிரா​விஸ் ஹெட், கேப்​டன் இஷான் கிஷன், ஹெய்ன்​ரிச் கிளாசன் ஆகியோ​ரும் மட்டையை சுழற்ற ஆயத்​த​மாக உள்​ளனர்.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான தங்​களின் அறி​முக ஆட்​டத்​திலேயே பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் தலா நான்கு விக்​கெட்​டு​களைக் கைப்​பற்​றி​யிருந்​தா​லும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத்​தின் பந்​து​வீச்​சுப் பிரிவு ஒப்பீட்​டள​வில் அனுபவ​மற்​றது.

எனினும் சமீபத்​திய போட்​டிகளில் அந்த அணி​யின் பந்​து​வீச்சு துறை முன்​னேற்​றம் கண்​டுள்​ளது.

இஷன் மலிங்கா நெருக்​கடி​யான தருணங்​களில்​ விக்​கெட்​ கைப்​பற்​றுவது பலம்​ சேர்த்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *