புதுடெல்லி:
ஜெர்மனியின் ஹேகன் நகரில் ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க சிடிஐ ஹேகன் சர்வதேச குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் அனுஷ் அகர்வாலா மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார்.
அவர், தனது ‘புளோரியானா’ குதிரையுடன் இணைந்து 70.94 சதவீத புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.