‘த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

சென்னை:
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் த்ரிஷ்யம்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் வெற்றிப் பெற்றநிலையில் தற்போது மூன்றாம் பாகம் த்ரஷ்யம் -3 உருவாகி உள்ளது.

முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது.

இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதலில் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தற்போது மே. 21 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ தவிர வேறு நிறுவனங்களுக்கு விற்க டெல்லி உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *