மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவு…

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

142 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்ற உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *