மம்தா பானர்ஜி பவானிபூரில் அதிர்ச்சி தோல்வி!!

பவானிபூர்;
பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது முதல்வர் மம்தா, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இடையே கடும் போட்டி நிலவியது.

பிற்பகல் நிலவரப்படி சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலையில் இருந்தார்.

இந்த வித்தியாசம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இரவு 7.30 மணி நேர நிலவரப்படி இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,000 ஆக குறைந்தது.

முதல்வர் மம்தாவும், சுவேந்து அதிகாரியும் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்திருந்தனர்.

16-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு நடப்பதால் திரிணமூல் முகவர்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது வாக்குச்சாவடி மைய அதிகாரி சுர்ஜனானி பஞ்சாபி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது சட்டை கிழிந்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இறுதியில் சுவேந்து அதிகாரி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது முதல்வர் மம்தா, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.

வாக்கு திருட்டு நடைபெறுவதாக கோஷம் எழுப்பியபடி அவர் வெளியேறிச் சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *