சென்னை:
தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவ தில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று மாலை தங்கள் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
நேற்று ஆதரவு கேட்ட வந்த நிலையில், இன்று மீண்டும் வந்தார்.
அப்போது தவெகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.
இதன் தவெக கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை உள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவும் நிலையில், ஆதரவு கடிதத்தை தவெக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.