அதிகாரம், பதவி சுகத்திற்காக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது – வானதி சீனிவாசன்!!

சென்னை,
தனிபெரும் கட்சியாக விஜய் உருவெடுத்திருந்தாலும், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை.

ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக காங்கிரஸ் விமர்சித் திருக்கும் நிலையில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவையில், செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றம்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஆதரவு கடிதங்கள், தேவைப்படக்கூடிய ஆதாரங்களை கவர்னர் கேட்கிறார்.


அதைக்கூட கேட்கக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? கவர்ன ருக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. அதிகாரம், பதவி சுகத்திற்காக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *