சென்னை:
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு ஆதரவு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வன்னிஅரசு பேசியதாவது:-
- வாக்கெடுப்பில் வென்று த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்.
- மிகச்சிறந்த அரசு என்ற பெயர் பெற்று த.வெ.க. அரசு செயல்பட வேண்டும்.
- ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என அனைவருக்குமான அரசாக த.வெ.க. அரசு இருக்கும் என்பதை முதலமைச்சர் விஜய் நிரூபித்துள்ளார்.
- எதிர்கட்சியினரை முதலமைச்சர் விஜய் சந்தித்தது இந்தியாவுக்கே முன்னுதாரணம்.
- த.வெ.க. அரசு மாநில உரிமைகளை பாதுகாக்க என்றும் குரல் கொடுக்க வேண்டும்.
- மாநில உரிமையை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.
- ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று வலியுத்தினார்.