மாநகரம், கைதி, விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ‘DC’ என பெயரிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
லோகேஷ் ‘தேவதாஸ்’ கதாபாத்திரத்திலும், வாமிகா ‘சந்திரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படத்தின் ‘பிளடி வாலண்டைன்’ ப்ரோமோ காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது.
2 வாரங்கள் முன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று DC படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ப்ரோமோவை போலவே படத்தின் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதம் போலவே இப்படமும் அதீத வன்முறையான கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் நகர்கிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.