கணவர் மற்​றும் மருத்​து​வ​ரான மகளை பறி​கொடுத்த பெண்​ணுக்கு ரூ. 1.60 கோடியை இழப்​பீ​டாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் உத்தரவு!!

சென்னை:
இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் அருகே கார் மீது லாரி மோதி விபத்​துக்கு உள்​ளான​தில் கணவர் மற்​றும் மருத்​து​வ​ரான மகளை பறி​கொடுத்த பெண்​ணுக்கு ரூ. 1.60 கோடியை இழப்​பீ​டாக வழங்க தனி​யார் இன்​சூரன்ஸ் நிறு​வனத்​துக்கு சென்னை மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை வில்​லி​வாக்​கம் திரு​மலை நகர் பகு​தி​யில் மருந்​தகம் நடத்தி வந்​தவர் பாஸ்​கர் (61). இவரது மனைவி ஜோதிகா (49), சொந்​த​மாக பியூட்டி பார்​லர் நடத்தி வரு​கிறார்.

மகள் ஷோபிகா (26), தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார்.

மூவரும் குடும்​பத்​துடன் ஏலகிரி சென்று விட்டு கடந்த 2023 மே 14-ம் தேதி சென்​னைக்கு காரில் திரும்​பிக் கொண்​டிருந்​தனர். காரை அஸ்​வின்​கு​மார் என்​பவர் ஓட்டி வந்​துள்​ளார்.

அப்​போது இரவு 9 மணி​யள​வில் கார் பெங்​களூரு – சென்னை தேசிய நெடுஞ்​சாலை​யில் இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் அருகே வந்து கொண்​டிருந்​த​போது சிப்​காட்​டில் இருந்து அதிவேக​மாக நெடுஞ்​சாலை​யில் புகுந்த சரக்கு லாரி, கார் மீது மோதி​யது.

இதி்ல் படு​காயமடைந்த பாஸ்​கரும், அவரது மகள் ஷோபிகா​வும் உயி​ரிழந்​தனர். ஜோதி​கா​வும், கார் ஓட்​டுநரும் பலத்த காயங்​களு​டன் உயிர் தப்​பினர்.

இந்​நிலை​யில் இளம் மருத்​து​வ​ரான தனது மகள் மற்​றும் கணவரின் இறப்​புக்​கும், தனக்கு ஏற்​பட்ட காயங்​களுக்​கும் ரூ.3 கோடி இழப்​பீடு கோரி சென்னை மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான இழப்​பீட்டு தீர்ப்​பா​யத்​தில் ஜோதிகா தனித்​தனி​யாக 3 வழக்​கு​களைத் தொடர்ந்​தார்.

இந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை சிறு வழக்​கு​களுக்​கான முதன்மை நீதி​மன்ற நீதிபதி ஏ.நசீர் அகமது, ‘இந்த விபத்து சரக்கு லாரி ஓட்​டுநரின் கவனக்​குறைவு, அலட்​சி​யப் போக்கு மற்​றும் அதிவேகத்​தால் நிகழ்ந்​துள்​ளது.

உயி​ரிழந்த பெண் மருத்​து​வர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ரூ. 1.14 லட்​சம் ஊதி​யம் வாங்கி வந்​துள்​ளார். மருந்​தகம் நடத்தி வந்த பாஸ்​கர் மாதம் ரூ. 50 ஆயிரம் சம்​பா​தித்​துள்​ளார். காயமடைந்த மனு​தா​ர​ரான ஜோதி​கா​வும் தன் பங்​குக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்​பா​தித்து வந்​துள்​ளார்.

இந்த விபத்​துக்கு கார் ஓட்​டுநரின் அதிவேகமே காரணம் என்ற சரக்கு லாரி காப்​பீடு செய்​யப்​பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறு​வனத்​தின் வாதம் ஏற்​புடையதல்ல.

மனு​தா​ரர் இந்த விபத்​தில் தனது மகள் மற்​றும் கணவரை பறி​கொடுத்​ததுடன் மட்​டுமல்​லாது அவரும் 34 சதவீதம் அளவுக்கு ஊனமடைந்​துள்​ளார்.

எனவே அவரது மகளின் இறப்​புக்கு ரூ. 1 கோடியே 29 லட்​சத்து 89 ஆயிரத்து 800, கணவரின் இறப்​புக்கு ரூ. 17 லட்​சத்து 24 ஆயிரம், மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு ரூ. 13 லட்​சத்து 58 ஆயிரத்து 300 என மொத்​தம் ரூ. 1 கோடியே 60 லட்​சத்து 72 ஆயிரத்து 100–ஐ தனியார் இன்​சூரன்​ஸ் நிறு​வனம் 7.5 சதவீத வட்​டி​யுடன்​ வழங்​க வேண்​டும்​’ என உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *