சிபிஐ இயக்​குநரின் பதவி நீட்​டிப்பு மற்​றும் நீட் தேர்வு விவ​காரத்​தில் மத்​திய பாஜக அரசின் போக்​கைக் கண்​டித்​து, தமிழ்​நாடு காங்கிரஸ் கட்சி சார்​பில் ஆர்ப்பாட்டம்!!

சென்னை:
சிபிஐ இயக்​குநரின் பதவி நீட்​டிப்பு மற்​றும் நீட் தேர்வு விவ​காரத்​தில் மத்​திய பாஜக அரசின் போக்​கைக் கண்​டித்​து, தமிழ்​நாடு காங்கிரஸ் கட்சி சார்​பில் நேற்று சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மத்​திய அரசு ஜனநாயக விரோதச் செயல்​களில் ஈடு​படு​வ​தாகக் கடுமை​யாகச் சாடி​னார்.

சிபிஐ இயக்​குநர் பிர​வீன் சூட்​டுக்கு ஓராண்டு பதவி நீட்​டிப்பு வழங்​கியதைக் கண்​டித்​தும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்​வு​களை நடத்த அனு​மதி மறுக்​கும் மத்​திய அரசைக் கண்​டித்​தும், காங்கிரஸ் கட்சி சார்​பில் நேற்று நாடு தழு​விய போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

அதன் ஒருபகு​தி​யாக, சென்னை தண்​டை​யார் ​பேட்டை அஞ்​சல் நிலை​யம் அருகே கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​தில், காங்​கிரஸ் தொண்​டர்​கள் கலந்து கொண்டு மத்​திய அரசுக்கு எதி​ராகக் கண்டன முழக்​கங்​களை எழுப்​பினர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் செல்​வப்​பெருந்​தகை பேசி​ய​தாவது: “பாஜக அரசு தொடர்ந்து சட்​டத்​துக்​குப் புறம்​பான செயல்​களில் ஈடு​பட்டு வரு​கிறது.

சிபிஐ இயக்​குநர் பிர​வீன் சூட்​டுக்கு மீண்​டும் மீண்​டும் பதவி நீட்​டிப்பு வழங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்? ‘நாட்​டிற்கு எது நல்​லதோ அதைச் செய்​யுங்​கள்’ என நாடாளு​மன்ற எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

ஆனால், பாஜக அரசு எதை​யும் செவிமடுத்​துக் கேட்​ப​தாக இல்​லை; தன்​னிச்​சை​யாகச் செயல்​பட்டு வரு​கிறது.

மறு​புறம், நீட் தேர்​வால் நம் நாட்​டுப் பிள்​ளை​கள் தற்​கொலை செய்​து​கொள்​ளும் அவலம் தொடர்​கிறது. மத்​திய அரசு சொல்​வதை நம்​பித் தேர்வு எழு​தி​விட்டு வரும் மாணவர்​களுக்கு ஏமாற்​றமே மிஞ்​சுகிறது.

ஒரு​புறம் வினாத்​தாள்​கள் கசிந்து விற்​பனை செய்​யப்​படு​கின்​றன, மறு​புறம் வேண்​டிய​வர்​களுக்​குத் தாராள​மாக வழங்​கப்​படு​கின்​றன.

இத்​தகைய முறை​கேடு​களால்​தான் மாணவர்​கள் மனமுடைந்து தற்​கொலைக்​குத் தள்​ளப்​படு​கிறார்​கள். மோடி அரசு இனி​யா​வது தனது பிடி​வாதப் போக்கை மாற்​றிக்​கொள்ள வேண்​டும்.” இவ்​வாறு அவர் பேசி​னார்.

பிறகு அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “5 மாநில தேர்​தல் முடிந்த பிறகு பெட்​ரோல், டீசல் விலையை பிரதமர் உயர்த்​து​வார் என நாங்​கள் ஏற்​கெனவே தெரி​வித்​தோம். அதைத்​தான்​ இப்​போது அவர்​ செய்​திருக்​கிறார்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *