காக்​களூரில் ஒரே நாளில் 18 பேரை கடித்த வெறிநாய்!!

திரு​வள்​ளூர்:
தமிழகம் முழு​வதும் தெரு நாய்​கள் குழந்​தைகள், பெரிய​வர்​கள் என அனை​வரை​யும் கடிக்​கும் நிகழ்வு தொடர் கதை ஆகி​விட்​டது. இதனால் உயி​ரிழப்​பு​களும் ஏற்​படு​கிறது.

திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூர் ஊராட்​சி​யில் நாய்கள் கூட்​ட​மாக சுற்றி வரு​கின்​றன.

திரு​வள்​ளூரில் இருந்து காக்​களூர் வழி​யாக இருசக்கர வாக​னத்​தில், நடந்து செல்​பவர்​கள் நாய்​கள் கடித்து விடுமோ என்ற அச்​சத்​தில் சாலையை கடந்து செல்​கின்​றனர்.

இந்​நிலை​யில் காக்​களூர் ஊராட்சி குடி​யிருப்பு பகு​தி​யில் சுற்​றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால் சாலை​யில் செல்​லும் நபர்​கள் அனை​வரை​யும் கடித்​துள்​ளது.

அந்த பகு​தி​யில் சென்ற 3 பெண்​கள், 15 ஆண்கள் என 18 பேரை அந்த நாய் கடித்​துள்​ளது. திரு​வள்​ளூர் நகராட்சி துப்​புரவு பணி​யாளர் சரசு (47), காக்​களூர் பகு​தி​யைச் சேர்ந்த கஜேந்​திரன்​(65) சுரேஷ்(42) ரவிக்​கு​மார்​(26) பாஸ்​கர்​(47) லோக​நாதன் (60) உட்பட 18 பேரை அப்​பகுதி மக்​கள் மீட்டு திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பி வைத்​தனர்.

இதனால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நாயை பிடிக்க மாவட்ட நிர்​வாகத்​துக்கு கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஒரே நாளில் 18 பேரை நாய் கடித்​துள்ள சம்​பவம் காக்​களூரில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *