எங்​கள் அணி 4 கேட்ச்​களை விட்​டது தோல்விக்​குக் காரண​மாக அமைந்​து​விட்​டது. – ஷுப்மன் கில்!!

கொல்​கத்தா:
ஐபிஎல் தொடரில் கொல்​கத்தா அணி​யுட​னான போட்​டி​யின்​போது கேட்ச்​களை தவற​விட்​ட​தால் தோல்வி கண்டோம் என்று குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் கேப்​டன் ஷுப்மன் கில் தெரி​வித்​தார்.

கொல்கத்தா, குஜராத் அணி​களுக்கு இடையி​லான ஐபிஎல் லீக் ஆட்​டம் நேற்று முன்​தினம் இரவு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்​றது.

இதில் கொல்​கத்தா அணி, 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. முதலில் விளை​யாடிய கொல்​கத்தா அணி 20 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 247 ரன்​கள் குவித்​தது. அஜிங்க்ய ரஹானே 14, ஃபின் ஆலன் 93, அங்​ரிஷ் ரகு​வன்ஷி 82, கேமரூன் கிரீன் 52 ரன்​கள் குவித்​தனர்.

பின்​னர் விளை​யாடிய குஜ​ராத் அணி, 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 218 ரன்​கள் எடுத்து தோல்வி கண்​டது. சாய் சுதர்​ஷன் 53, ஷுப்​மன் கில் 85, நிஷாந்த் சிந்து 1, ஜாஸ் பட்​லர் 57, ராகுல் டெவாட்​டியா 2 ரன்​கள் எடுத்​தனர்.

இந்​தப் போட்​டி​யில் வெற்றி பெற்​றிருந்​தால் குஜ​ராத் அணி, பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி இருக்கும். ஆனால் தோல்வி அடைந்​த​தால் தற்​போது சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) உடனான போட்​டியை அந்த அணி எதிர்​நோக்​கி​யுள்​ளது.

தோல்விக்​குப் பின்​னர் குஜ​ராத் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் கூறிய​தாவது: இந்த ஆடு​களத்​தில் 200 முதல் 210 ரன்​கள் எடுத்​தால் போதும் என்று நினைத்​தோம்.

ஆனால், பீல்​டிங்​கின்​போது நாங்​கள் அதி​க​மான கேட்ச்​களை தவற​விட்​டோம். ஆடு​களம் நன்​றாகவே இருந்​தது.

யாரை​யும் தடுத்து நிறுத்​து​வது கடினம். மேலும் நாங்​கள் பேட்​டிங்​கின்​போது சிறப்​பாகவே செயல்​பட்​டோம். அதே​நேரத்​தில், நாங்​கள் இன்​னும் சிறப்​பாக ஃபீல்​டிங் செய்​திருக்க வேண்​டும் என்​ப​தில் எந்​த​வித மாற்​றுக்​கருத்​தும் இல்​லை.

நாங்​கள் எளி​தாக 4 கேட்ச்​களைத் தவற விட்​டு​விட்​டோம். அதனால் வெற்​றிக்​குத் தகு​தி​யான அணி​யாக எங்​கள் அணி இல்லை. 4 கேட்ச்​களை விட்​டது தோல்விக்​குக் காரண​மாக அமைந்​து​விட்​டது.

அந்த வகை​யில் சிறந்த அணியே குவாலிஃபையர் தகு​திச் சுற்​றுக்​குச் செல்​லும். மீண்​டும் அகம​தா​பாத்​துக்​குச் செல்​கிறோம். சில நாட்​கள் ஓய்​வெடுத்த பின்​னர் இதிலிருந்து நாங்​கள் மீண்டு வரு​வோம் என்று நம்​பு​கிறோம். இவ்வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *