புதுடெல்லி:
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஷெட்டி ஜோடி 12-21, 23-25 என்ற செட் கணக்கில், இந்தோனேசியாவின் டேனியல் மார்ட்டின், லீ ரோலி கார்னடோ ஜோடியுடன் தோல்வி கண்டு வெள்ளி பதக்கத்தை வென்றது.