மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்……

மேஷம்

மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இனிய செய்தியொன்று வரும்.

மிதுனம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள், காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.

கடகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

புகழ்மிக்கவர்களை பற்றாக்குறை அகலும், நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துகளை எற்றுக்கொள்வர்.

கன்னி

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

துலாம்

அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சலுகைகளை வழங்குவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்

சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். வியாபாரம் தொழிலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். திட்டமிட்ட காரியமொன்று திசைமாறி செல்லலாம். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

மகரம்

எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்

கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண் விரயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *