ராயபுரத்​தில் கடத்​தப்​பட்ட குழந்தையை, 5 மணி நேரத்​தில் மீட்ட தனிப்​படை போலீ​ஸாரை காவல் ஆணை​யர் நேரில் அழைத்து பாராட்டு!!

சென்னை: ​
ராயபுரத்​தில் கடத்​தப்​பட்ட குழந்தையை, 5 மணி நேரத்​தில் மீட்ட தனிப்​படை போலீ​ஸாரை காவல் ஆணை​யர் நேரில் அழைத்து பாராட்​டி​னார். சென்​னை, முகலி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் கீதா (29).

இவர், கடந்த 13-ம் தேதி ராயபுரத்​தில் உள்ள ஆர்​எஸ்​ஆர்​எம் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் பிரசவத்​துக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். 15-ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்​தது.

மருத்​து​வ​மனை​யில் அவருக்கு அறி​முக​மான கொடுங்​கையூரைச் சேர்ந்த அமுலுக் பவரோஸ் மேரி (29) என்ற பெண், டிஸ்​சார்ஜ் செய்த பின்​னர் வீட்​டுக்கு அழைத்து செல்ல ஏற்​பாடு செய்​வ​தாக கூறி, கீதா​வின் பிறந்து 9 நாட்​களே ஆன குழந்​தையை கடத்​திச் சென்​றார்.

இது தொடர்​பாக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப்பதிந்​து, குழந்​தையை 5 மணி நேரத்​தில் மீட்​டனர்.

மேலும், கடத்​தலில் ஈடுபட்ட அமுலுக் பவரோஸ் மேரி, உடந்​தை​யாக இருந்த அவரது கணவர் தாமஸ் (32) ஆகிய இரு​வரை​யும் கடந்த 24-ம் தேதி கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், விரைந்து செயல்​பட்டு குழந்​தையை மீட்ட தனிப்​படை போலீ​ஸா​ரான ராயபுரம் உதவி ஆணை​யர் பிர​மானந்​தன், காசிமேடு சட்​டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்​வாளர் மைனர்​சாமி, உதவி ஆய்​வாளர் கோபி​நாத், தலை​மைக் காவலர்​கள் ஜீவா, கோபி​நாத், முத்​துகு​மார், இளங்​கோவன் ஆகிய 7 பேரை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று நேரில் அழைத்து வெகும​தி வழங்​கி பா​ராட்​டி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *