கட்சியில் மீண்டும் சி.வி.சண்முகத்தை சேர்க்க கூடாது- அ.திமு.க. நிர்வாகிகள் ஆவேசம்…

விழுப்புரம் ;
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம், வளவனூர் பேரூர் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட செயலாளர் பசுபதி பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் சில துரோகிகளும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் நம் கட்சி ஏதோ ஒரு குறைந்தளவிற்கு சென்று விட்டதை போல் பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

பதவிக்கு ஆசைப்பட்ட துரோகிகள் எல்லாம் கட்சியின் தோற்றத்தை மாற்றி காட்ட நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நான் புதிதாக கட்சிக்கு வரவில்லை.

கடந்த 1996-ல் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்.

அப்போதெல்லாம் சி.வி. சண்முகம் ஒரு ஆளில்லை.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் 20 ஆண்டுகள் மன்னர் ஆட்சி நடந்திருந்தது.

அவர்கள் நினைத்தது, தான் சட்டம். அவர்கள் மட்டும் தான் கருத்தை சொல்ல முடியும்.

பேசமுடியும் என்பது இ.பி.எஸ்.சால் மாற்றப்பட்டு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் மக்கள் ஆட்சி நிறுவப்பட்டிருக்கிறது.

நாம் அனைவரும் சமம். நாம் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதை போல் மாயை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அ.தி.மு.க. வலுவாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *