‘டிமான்டி காலனி 3’ படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்!!

சென்னை:
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி 3…’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.

உலகளவில் ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கி இருக்கிறது.

இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

அருள்நிதி, பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த மாதம் படக்குழு தெரிவித்த நிலையில், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ‘டிமான்டி காலனி 3’ படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அருள்நிதி, பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *