வருகிற 23-ந்தேதி சோனாக்சி சின்ஹா-க்கு திருமணம் !!

பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தி நடிர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். சோனாக்சி சின்ஹா 2010-ல் சல்மான் கானின் ‘தபாங்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஜோக்கர், தபாங் 2, அகிரா, போர்ஸ் 2’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் சோனாக்சி சின்ஹா நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் கடைசியாக நடித்த ‘ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் கூடுதல் சுவாரசிய என்ன என்றால்.

இத்தொடரில் நடித்தவர்களுக்கு அடுத்தடுத்து கல்யாணம் நிச்சயம் நடந்துள்ளது. ரிச்சா சதாவிற்கு அந்த தொடரின் ஒரு பாடலுக்கு படப்பிடிப்பு நடத்தும் 10 நாள் முன் திருமணம் முடிந்தது. அதிதி ராவ் ஹைதரிக்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் சித்தார்த்துடன் நிச்சயம் முடிந்தது தற்பொழுது அடுத்ததாக நடித்த சோனாக்சி சின்ஹாவிற்க்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

சோனாக்சி சின்ஹாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. இவரும், இந்தி நடிகர் சாஹிர் இக்பாலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இருவரும் வருகிற 23-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் சோபோ ஹாட் ஸ்பாடில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் Xl என்ற திரைப்படத்தில் சோனாக்சி மற்றும் சாகிர் இக்பால் சேர்ந்து நடித்து இருந்தனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் சோனாக்சி சின்ஹாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *