சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, ஊர்​வல​மாக சீர்வரிசையுடன் வந்த முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!

சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்​கி​னார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் – கயல்விழி தம்​ப​தி​யினருக்​கு, முதலா​வ​தாக ஆண் குழந்தை இருக்கும் நிலை​யில், அவர்​களுக்கு இரண்​டாவ​தாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்​தது.

இந்​நிலை​யில், நீலாங்​கரை​யில் உள்ள சீமானின் இல்​லத்​துக்கு நாதஸ்​வரம், மேள தாளங்​கள் முழங்க, திரளான பெண்​கள் கூட்​டத்​துடன் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக நேற்று வருகை தந்​தார்.

அவருடன் வந்​திருந்த பெண்​கள் பழத்​தட்​டு​களு​டன் சீர்​வரிசையை எடுத்து வந்​திருந்​தனர்.

தன் வீட்​டுக்கு சீர்​வரிசை பொருட்​களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வீட்டுக்கு வெளி​யில் வந்து நின்று முகமலர்ச்​சி​யுடன் வரவேற்​றார்.

அப்​போது, மரி​யாதை நிமித்தமாக சீமானுக்​கு, பட்டு வஸ்​திரத்தை அனிதா ராதாகிருஷ்ணன் அணி​வித்தார்.

தொடர்ந்து அவரது கையை பிடித்து சீமான், தனது வீட்​டுக்​குள்ளே அழைத்து சென்​றார்.

அங்​கே, குழந்​தை​யுடன் இருந்த கயல்​விழியை நலம் விசா​ரித்​து, பின்​னர் குழந்​தைக்கு தங்க நகை பரிசளித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன், சீமான் – கயல்​விழி குடும்​பத்​தினருக்கு நீண்ட கால​மாக நல்ல நட்​புடன் இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், தம்பதி​யினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்​கும் சூழலில், மாமன் சீராக, பிறந்த குழந்​தைக்கு சீர்​வரிசை பொருட்​களை அவர் எடுத்து வந்​த​தாக நாதகவினர் தெரி​வித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *