பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும் – அதிமுக எம்.பி தனபால்!!

சென்னை:
“பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல் வருகிறது.

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதிமுக எம்.பி தனபால் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தவெகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.

மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து​வேறுபாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர்.

மேலும், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்தனர்.

அதைத்​தொடர்ந்​து, இரு அணி​யினரும் சட்​டப்​பேரவை அதி​முக தலை​வர், கொற​டாவைத் தேர்ந்​தெடுத்து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம் கடிதம் அளித்​திருந்​தனர்.

அதே​போல், இரு அணி​யினரும் எதிரணி​யைச் சேர்ந்த எம்​எல்​ஏ.க்​களை கட்​சித் தாவல் தடை சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்​கம் செய்​யு​மாறும் அவரிடம் கடிதம் அளித்​தனர்.

இதற்​கிடையே, சி.​வி.சண்​முகம் அணி​யில் இருந்த மரகதம் குமரவேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

மேலும், ஆற்​காடு எம்​எல்ஏ சுகு​மார் உள்​ளிட்ட 6 எம்​எல்​ஏ.க்​கள், பழனி​சாமி அணிக்கு மாறி​னார். இதனால் சி.​வி.சண்​முகம் அணி​யின் பலம் 15 ஆகக் குறைந்​தது.

இந்​நிலை​யில், சி.​வி.சண்​முகம் அணி எம்​எல்​ஏக்​களான எஸ்.பி.வேலு மணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்ளிட்டோர் பழனி​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப்பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச் சென்​றனர்.

அங்கு இரு அணி​கள் சார்​பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலை​வரிடம் ஏற்​கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்​தனர்.

மேலும், அதி​முக​வின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக பழனிசாமி, கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரை தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர்.

ஒருவழியாக அதிமுக உள்ளரசியல் முடிவுக்கு வந்த நிலையில், “பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.

மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல் வருகிறது.

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதிமுக எம்.பி தனபால் வலியுறுத்தியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *