புதுடெல்லி:
4 நாடுகள் பங்கேற்ற ஒற்றுமை கோப்பை கால்பந்து தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதி சுற்றில் நேற்று முன்தினம் இந்திய அணி, ஜமைக்காவுடன் மோதியது. இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
ஜமைக்கா அணி தரப்பில் 8-வது நிமிடத்தில் கார்ட்னி கிளார்க்கும், 78-வது நிமிடத்தில் கஹெய்ம் டிக்சனும் கோல் அடித்து அசத்தினர்.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயுடன் இன்று மோதுகிறது.
ஜிம்பாப்வே அணி அரை இறுதி சுற்றில் நைஜீரியாவிடம் தோல்வி கண்டிருந்தது.