தவெகவுக்கு பெற்றோர் வாக்களிக்க குழந்தைகளை பயன்படுத்திய விவகாரம்: தேர்தல் ஆணையம், கட்சிகள் பதிலளிக்க உத்தரவு…..

சென்னை:
சட்​டமன்​றத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்​தது, பெற்​றோரை தங்​கள் கட்​சிக்கு வாக்​களிக்​கும்​படி குழந்​தைகள் மூல​மாக அறி​வுறுத்​தி​யது தொடர்​பாக விசா​ரணை நடத்​தக் கோரிய வழக்​கில் தேர்​தல் ஆணை​யம், தவெக, திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடலூர் மாவட்​டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்​கறிஞர் வாசுகி தாக்​கல் செய்த பொது நலமனு​வில், நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போது வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்​த​தாக திமுக, அதி​முக​வுக்கு எதி​ராக​வும், பெற்​றோரை தங்​கள் கட்​சிக்கு வாக்​களிக்​கும்​படி குழந்​தைகளிடம் செல்​வாக்கை செலுத்​தி​ய​தாக தவெக​வினருக்கு எதி​ராக​வும் குற்​றஞ்​சாட்டி இருந்​தார்.

இது தொடர்​பாக திமுக, அதி​முக, தவெக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு எதி​ராக சுதந்​திர​மான விசாரணை நடத்த உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, “தவெக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.​முரளிதர் ஆஜராகி, வெறும் செய்​தி​யின் அடிப்​படை​யில் மட்​டுமே இந்த வழக்கு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு தேர்​தல் நடத்தை விதி​கள் விலக்​கிக் கொள்​ளப்​பட்​டு​விடும்.

தேர்​தல் நடத்தை விதி​மீறல் தொடர்​பாக தேர்​தல் வழக்​கு​தான் தாக்​கல் செய்ய முடி​யும்” எனத் தெரி​வித்​தார்.

திமுக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, “குழந்​தைகளை பிரச்​சா​ரத்​தில் பயன்​படுத்​தி​ய​தாக தங்​களுக்கு எதி​ராக எந்த குற்​றச்​சாட்​டும் இல்​லை.

ஊழல் நடவடிக்​கையை பொறுத்​தவரை வெற்​றி​பெற்ற வேட்​பாளரை எதிர்​மனு​தா​ர​ராக சேர்க்க வேண்​டும்” என தெரி​வித்​தார்.

அதி​முக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பாலும் இதே வாதங்​களை முன்​வைத்​தார்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்​டும் எனக் கோரிக்கை விடுத்​தார்.

இதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி​கள், மனுவுக்கு பதிலளிக்​கும்​படி தவெக, தி​முக, அதி​முக தேர்​தல் ஆணை​யம் ஆகியோ​ருக்கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை ஜூலை 1-ம்​ தேதிக்​குத்​ தள்​ளிவைத்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *