குதிரை பந்தய பின்னணியில் உருவாகும் கதையில் ஆகாஷ் முரளி!! நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் ……

சென்னை:
மறைந்த டிகர் முரளியின் 2-வது மகன் ஆகாஷ் முரளி, ‘நேசிப்பாயா’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து அவர் நடிக்கும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இயக் கும் இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன் இப்படத்தைத் தொடங்கி வைத்தார்.

1970-களின் தொடக்கக் கால பின்னணியில், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஓர் இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தைச் சொல்லும் கதை யாக இது இருக்கும் என்றும் 70-களின் காலகட்ட வாழ்க்கை முறை,கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை நுணுக்கமாகப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *