கனமழை போன்ற பேரிடர்களை எதிர்​கொள்ள தயா​ராகவே இருக்​கிறோம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

சென்னை:
தென்​மேற்கு பரு​வ​மழைக்​கான முன்​னெச்​சரிக்கை பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று நடந்​தது.

இதில் வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் மற்​றும் துறை​ சார்ந்த உயர் அதி​காரி​கள் பங்கேற்றனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தென்​மேற்​குப் பரு​வ​மழை தற்​போது அந்​த​மானில் ஒரு​வார​மாக பெய்​து​வரு​கிறது.

வரும் நாட்​களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகு​தி​களில் கேரளா, தமிழகப் பகு​தி​களில் மழை பெய்ய இருக்​கிறது. இதையடுத்து முன்​னெச்​சரிக்​கை​யாக பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

பேரிடர் பணி​களை அரசுடன் இணைந்து செயல்​படுத்த பல்​வேறு நிறு​வனங்​கள், சமூக ஆர்​வலர்​கள் மாவட்ட வாரி​யாக தயார் ​நிலை​யில் உள்​ளனர். மத்​திய அரசும் தேவை​யான உதவி​களை செய்​யத் தயா​ராக உள்​ளது.

குறிப்​பாக, கனமழை நேரங்​களில் பொது​மக்​களுக்கு பாது​காப்​பான முறை​யில் பணி​களைச் செய்ய இத்​துறை விரை​வாக செய​லாற்றி வரு​கிறது.

அதனால் கனமழை போன்ற பேரிடர்களை எதிர்​கொள்ள தயா​ராகவே இருக்​கிறோம். இவ்​வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *