”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம் – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உறுதி!!

சென்னை:
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால்.

பின்னர், அவர், ”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது.

புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.

இந்நிலையில், புதிய ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆனையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பேற்புக்குப் பின்னர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்.

தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர்.

இவரது சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணை யர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார்.

7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார்.

பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ் குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாக பதவி வகித்தார்.

பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாக பதவி ஏற்றார்.

பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், 2020-ல் சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றது நினைவுகூரத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *