ஒரு முக்கிய முடிவை வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன் – ராகவா லாரன்ஸ் தகவல்!!

சென்னை:
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ”திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஊகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.

தற்போது நான் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணிகள் வரும் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *