மகளிர் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்னதான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஷபாலி வர்மா (29), ஸ்மிரிதி மந்தனா (39), யாஸ்திகா பாட்டியா (36), பாரதி ஃபுல்மாலி (ஆட்டமிழக்காமல் 56) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அஃபி பிளெட்சர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரான்ஙகள் தியேந்திரா டோட்டின் 49 ரன்கள் சேர்த்தார். ஷெமைன் கேம்பெல் 25 ரன்கள் அடித்தார்.

அதன்பின் சீரான இடைவௌயில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளைமறுதினம் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *