ஈரோடு :
இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.5ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசானையில், இடைத் தேர்தல் நடைபெற உள்ள வரும் பிப். 5ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அன்றைய தினம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்கு விடுமுறை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக உள்ளவர்கள்,வேறு தொகுதியில் பணியாற்றி கொண்டு இருந்தால் அவர்களுக்கும் இந்த அரசு விடுமுறை பொருந்தும் என்று அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.