கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக 3 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் தொடங்​கி சிபிஐ விசா​ரணை!!

கரூர்:
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக 3 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் சிபிஐ விசா​ரணை தொடங்​கியது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதுதொடர்​பாக கடந்த அக்​டோபர் முதல் கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்கி சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் சாலை​யின் அமைப்பு குறித்து நவீன கருவி​கள் மூலம் அளவீடு செய்​யப்​பட்​டதுடன், தொடர்ந்து அங்கு கடை வைத்​திருப்​பவர்​கள், பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர், காயமடைந்​தவர்​கள், நெடுஞ்​சாலை, மின்​வாரிய அலு​வலர்​கள், தவெக நிர்​வாகி​கள், ஆட்​சி​யர், ஐ.ஜி. எஸ்​.பி. ஏடிஎஸ்​பி, டிஎஸ்பி உள்​ளிட்ட காவல் துறை அதி​காரி​கள் என பலரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. விஜ​ய்யின் பிரச்​சார வாக​னம் கொண்டு வரப்​பட்​டு, அளவீடு செய்​யப்​பட்​டு, அதன் ஓட்​டுநரிட​மும் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, டெல்​லி​யில் நடை​பெற்ற சிபிஐ விசா​ரணை​யில், தவெக தலை​வரும் தற்​போதைய முதல்​வரு​மான விஜய், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி, தவெக நிர்​வாகி​களும், தற்​போதைய அமைச்​சர்​களு​மான ஆனந்த், ஆதவ் அர்​ஜூ​னா, சிடிஆர்​. நிர்​மல்​கு​மார் மற்​றும் ஆட்​சி​யர், ஏடிஜிபி, எஸ்​.பி., இன்​ஸ்​பெக்​டர் உள்​ளிட்​டோர் ஆஜராகினர்.

இந்நிலையில், சிபிஐ இன்​ஸ்​பெக்​டர் மணிவண்​ணன் மற்​றும் மற்​றொரு அலு​வலர் என இரு​வர் மட்​டுமே கடந்த 3 மாதங்​களாக கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்கி அலு​வலக பணி​களை மேற்​கொண்டு வந்​தனர்.

3 மாதங்​களுக்குப் பிறகு, சம்​பவத்​தின்​போது பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாருக்கு சிபிஐ சம்​மன் அனுப்​பிய நிலை​யில், கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் காவல் ஆய்​வாளர் சையது அலி, உதவி ஆய்​வாளர்​ ரமேஷ் உள்​ளிட்ட 10 போலீ​ஸார் நேற்று சிபிஐ விசா​ரணைக்கு ஆஜராகினர்.

அவர்​களிடம் சிபிஐ இன்​ஸ்​பெக்​டர் மணிவண்​ணன் விசா​ரணை நடத்​தி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *