இந்தியா, நியூஸி., ஆஸி. உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று இங்​கிலாந்​தின் பர்மிங்காமில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது!!

பர்மிங்காம்:
ஐசிசி மகளிர் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (12-ம் தேதி) இங்​கிலாந்​தின் பர்மிங்காமில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது.

வரும் ஜூலை 5 வரை நடை​பெறும் இந்​தத் தொடரை இங்​கிலாந்து மற்​றும் வேல்ஸ் கிரிக்​கெட் வாரி​யம் நடத்​துகின்​றன. கடைசி​யாக கடந்த 2009-ம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கி லாந்து நடத்​தி​யிருந்​தது.

இம்​முறை 12 அணி​கள் கலந்துகொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

குரூப் 1-ல் ஆஸ்​திரேலி​யா, தென் ஆப்​பிரிக்​கா, இந்​தி​யா, பாகிஸ் தான், வங்​கதேசம், நெதர்​லாந்து அணி​கள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்​பிய​னான நியூஸிலாந்​து, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இங்​கிலாந்​து, இலங்​கை, அயர்​லாந்​து, ஸ்காட்​லாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

வங்​கதேசம், அயர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, நெதர்​லாந்து ஆகிய 4 அணி​களும் தகுதி சுற்​றின் வாயி​லாக பிர​தான சுற்​றில் நுழைந்துள்​ளன.

இதில் நெதர்​லாந்து அணி முதன்​முறை​யாக டி 20 உலகக் கோப்​பை​யில் களமிறங்க உள்​ளது. 24 நாட்​கள் நடை​பெறும் இந்​தத் தொடரில் மொத்​தம் 33 ஆட்​டங்​கள் நடத்​தப்பட உள்​ளன.

தொடக்க நாளான இன்று இரவு 11 மணிக்கு பர்​மிங்​காமில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து – இலங்கை அணி​கள் மோதுகின்றன.

நடப்பு சாம்​பிய​னான நியூஸிலாந்து தனது முதல் ஆட்​டத்​தில் நாளை (13-ம் தேதி) மேற்கு இந்​தி​யத் தீவு​களு​டன் மோதுகிறது.

இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 14-ம் தேதி பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இது​வரை நடத்​தப்​பட்​டுள்ள 9 தொடர்​களில் 6 முறை ஆஸ்​திரேலிய மகளிர் அணி சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளது.

அந்த அணியை தவிர்த்து இங்​கிலாந்​து, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், நியூஸிலாந்து அணி​கள் தலா ஒரு முறை கோப்​பையை கைப்​பற்​றி​யுள்​ளன.

ஆஸ்​திரேலிய அணி 7-வது முறை​யாக கோப்​பையை வெல்​லும் முனைப்​பில் களமிறங்க உள்ள நிலை​யில் நியூஸிலாந்து அணி சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

கடந்த 3 ஐசிசி தொடர்​களி​லும் இறு​திப் போட்டி வரை சென்று கோப்​பையை கைகளில் ஏந்த முடி​யாமல் சென்ற தென் ஆப்பிரிக்க அணி​யும், கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யும், தொடரை நடத்​தும் இங்​கிலாந்து அணி​யும் கோப்​பையை வெல்ல போராடக்​கூடும்.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்திய அணி வெள்​ளைப் பந்து கிரிக்​கெட்​டில் மிக​வும் வலு​வான மற்​றும் நிலை​யான ஆட்டத்தை வெளிப்​படுத்​தும் அணி​யாக உரு​வெடுத்​துள்​ளது.

இதனால் இந்திய அணி, ஆஸ்​திரேலி​யா​வைப் போலவே ஒரே நேரத்​தில் 50 ஓவர் மற்​றும் டி20 ஆகிய இரு உலகக் கோப்பைகளையும் தன்​வசம் வைத்​திருக்​கும் 2-வது அணி என்ற சாதனையை படைப்​ப​தற்கு முயற்​சிக்​கக்​கூடும்.

ரேணுகா சிங், கிராந்தி கவுட் போன்ற வேகப்​பந்து வீச்​சாளர்​கள் மற்​றும் தீப்தி சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்களு​டன், மிக​வும் வலு​வான பேட்​டிங் வரிசையை​யும் இந்திய அணி கொண்​டுள்​ளது.

இது, கடந்த ஏழு மாதங்​களுக்​குள் மற்​றொரு ஐசிசி உலகக் கோப்​பைப் பட்​டத்​தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இந்​திய அணிக்கு வழங்​கு​கிறது.

இந்திய அணி விவரம்: ஹர்​மன்​பிரீத் கவுர் (கேப்​டன்), ஸ்மிருதி மந்த​னா, ஷெபாலி வர்​மா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்​மா, ரிச்சா கோஷ் (விக்​கெட் கீப்​பர்), ஸ்ரீ சரணி, யஸ்திகா பாட்​டி​யா, நந்​தினி சர்​மா, அருந்​ததி ரெட்​டி, ரேணுகா தாக்​குர், கிராந்தி கவுட், ஸ்ரே​யங்கா பாட்​டீல், ராதா யாதவ்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *