நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை !!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.


இதற்கிடையே, நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி அன்று நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்கள் 3 மணி 15 நிமிடங்கள் என மொத்தம் 195 நிமிடங்கள் வரை தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது.

நிர்வாக நடைமுறைகளால் தேர்வு எழுதும் நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வினாத்தாள் புத்தகத்தில் ரஃப் ஒர்க் செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *