சென்னை
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அ.தி.மு.க.வில் பதவி!! பச்சமால் குற்றச்சாட்டு!!
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அ.தி.மு.க.வில் பதவி. த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சமால் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலகட்டங்களில் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர்களும் பல்வேறு பதவிகளை அடைய முடியும். ஆனால் இப்போது அ.தி.மு.க. வை பொருத்தவரை பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஜெயலலிதாவால் தீயசக்தி என்று அழைக்கப்பட்ட தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார்கள்.
இது என்னை போன்ற ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர் களுக்கு பிடிக்கவில்லை. முதலமைச்சர் விஜய் மக்கள் நலத்திட்ட ங்களை திறம்பட செய்து வருகிறார்.
எனவே அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் இன்று த.வெ.க.வில் இணைந்துள்ளோம்.
இவர் அவர் கூறினார்.